
விசாலாட்சி சொன்ன வார்த்தை ஒரு பக்கம் இருக்க ஜீவானந்தத்தை நாடியுள்ளார் விசாலாட்சி.
Ethir Neechal Episode Update 21.09.23 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஜான்சிராணி குணசேகரன் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது, விசாலாட்சி நீங்க என்ன வேணா பண்ணுங்க ஆனா என்ன விட்டுடுங்க என்று சொல்லி கண்கலங்க நந்தினி நீங்க என்ன தப்பு பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறார். அடுத்து ஜீவானந்தத்தின் ஆதரவாளரான கௌதம் ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்று விசாரிக்க குணசேகரன் என்பதை தெரிய வருகிறது.

அடுத்து ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து இத சொல்ல எனக்கு நெருடலா தான் இருக்கு என்று எதையோ கூறுகிறார்.