ஜீவானந்தம் பற்றி தர்ஷன் தர்ஷினி சொன்ன வார்த்தையால் ஆக்ரோசப்பட்டுள்ளார் கதிர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்றைய எபிசோடில் தர்ஷன் அந்த ஆள் கட்ற பணத்துல என்னால் படிக்க முடியாது என பேச ஞானம் கோபப்பட்ட நிலையில் இன்று 13 வயசுல எங்க அப்பா விட்டுட்டு போனாரு, எங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாரு தெரியுமா என்று சொல்ல உங்க அப்பா விட்டுட்டு போய் உங்களுக்கு கஷ்டம் கொடுக்காது எங்க அப்பா இருந்துட்டு கஷ்டத்தை கொடுக்கிறார் என்று சொல்ல ஞானம் தர்ஷனை அறைந்து விடுகிறார்.

அடுத்து தர்ஷன் நான் இன்னைக்கு ஜீவானந்தம் சார் மீட் பண்ணேன் என்று சொல்ல தர்ஷினி அவரை மாதிரி ஒருத்தன் எனக்கு அப்பாவாக கிடைத்து இருக்கலாம் என்று கூற இதை கதிர் கேட்டுவிட்டு என்ன பிள்ளைகளை ஏத்தி விடுறியா என ஈஸ்வரியிடம் சண்டைக்கு வருகிறார்.

இதனால் கடுப்பான ஈஸ்வரி எங்க மனசுல இருக்கறத பேசுறதுக்கு எங்களுக்கு உரிமை இருக்கு என்று பதில் அடி கொடுக்கிறார்.