
குணசேகரனுக்கு ஆப்பு வைக்க தயாராகி உள்ளார் ஜான்சி ராணி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அடுத்து என்ன நடக்கும் என யாருக்கும் எதுவும் தெரியாமல் தொடர்ந்து விறுவிறுப்பாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சீரியல்னா இப்படி இருக்கணும் என எதிர்நீச்சல் சீரியலை பலரும் பாராட்டு வருகின்றனர். அதிலும் இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து தான் சீரியல் ஹைலைட்டாக இருந்து வருகிறார்.
குடும்பப் பெண்களைப் போற்றி படாத பாடு படுத்தி வரும் குணசேகரன் தன்னுடைய தங்கை ஆதிரையை கரிகாலனுக்கு திருமணம் செய்து கொடுக்க வாக்கு கொடுத்து இருக்க ஆதிரை அருணை தான் திருமணம் செய்து கொள்வேன் என தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் அந்த குணசேகரன் வாக்கு மட்டும் மாறட்டும் அவன் குடும்பத்தையே சந்தித்திருக்க வச்சிருவேன் என ஜான்சி ராணி கரிகாலனிடம் ஆவேசமாக பேச இனிமேதான் குணசேகரனுக்கு ஆப்பு தயாரா இருக்கு என பலரும் கமெண்ட் அடித்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.