ஷாக் கொடுத்த குணசேகரனுக்கு பெரிய கும்பிடு போட்டுள்ளார் கதிர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையை கல்யாணம் செய்து கொள்வதற்காக எஸ் கே ஆர் குடும்பம் அப்பத்தாவின் 40% ஷேரை கேட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது குணசேகரன் முதலில் அரசு கேட்ட ஃபேக்டரியை சீதனமாக கொடுக்க முடிவெடுக்க கதிர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார். என்னமோ நீ சொந்தமா உழைச்சு தூக்கி நிறுத்தின கம்பெனி மாதிரி பேசுற என குணசேகரன் சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறான்.

மேலும் நந்தினி பேருக்குத் தான் இவர் இந்தியா இருக்காரு. தானும் மருமகளுங்க மாதிரி டம்மி பூசாகிட்டோனு யோசிக்கிறாரு மாமா என சொல்ல குணசேகரன் கதிரிடம் பேச போக கதிர் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டு வெளியே போகிறார்.

குணசேகரன் ஞானத்தை அவமானப்படுத்தியது போல விரைவில் கதிரை அவமானப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் அந்த சம்பவம் இன்றைய தினம் எபிசோட்டில் நடக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.