விசாலாட்சி கேட்ட கேள்விக்கு தனது பதிலாக அதிர்ச்சி கொடுத்துள்ளார் குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, குணசேகரன் ஆதரவு மருத்துவமனையில் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் வீட்டுக்கு வந்த விசாலாட்சி உனக்கு மனசு துடிக்கலயா என கேட்க குணசேகரன் எனக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம், அந்த எஸ் கே ஆர் குடும்பம் கிட்ட மானத்தை அடமானம் வைக்க முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து ஆதிரையை வீட்டுக்கு கூட்டி வர விசாலாட்சி ஏன்டி இப்படி பண்ண என கேட்க ஆதிரை எனக்கு எங்க நடக்கிறது எதுவுமே பிடிக்கல ஜனனி அண்ணி மட்டும் தான் என எதையோ சொல்கிறார். அது பிறகு ஜனனி இது ஆதிரை வாழ்க்கை, அவளோட மனசு உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன் என சொல்கிறார்.

இதனால் விசாலாட்சி ஆதிரை கல்யாண விஷயத்தில் முடிவு என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் கதைக்களம் இருக்கும் என ப்ரோமோ வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது.