குணசேகரனுக்கு அரசு செக் வைக்க உள்ளார்‌.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். கடந்த எபிசோடில் நந்தினி மற்றும் ரேணுகா என இருவரும் குணசேகர் அண்ணன் எதிர்த்து பேசிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் பசு புலித்தோலை போத்திகிட்டு புள்ள மேயுமா இதெல்லாம் குணசேகரனுக்காகவே எழுதுனது மாதிரி இருக்கு என அப்பத்தா சொல்கிறார்.

அடுத்து அரசு வீட்டுக்கு வந்திருக்க விசாலாட்சி இதை செய்யுங்க அதை செய்யுங்கன்னு சொன்னா தானே எங்களுக்கும் நல்லா இருக்கும் என சொல்ல நாங்க நிச்சயமாக செய்யுங்கள் என்று சொல்ல மாட்டோம் என சொல்ல குணசேகரன் அப்ப வேற என்ன சொல்ல போறீங்க என கேள்வி எழுப்புகிறார்.

அனேகமாக அரசு கேட்கப் போவது அப்பத்தாவின் 40% ஷேராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.