குணசேகரன் கேட்ட கேள்விக்கு ஜனனி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் சக்தி அண்ணன்களான கதிர் மற்றும் ஞானத்திற்கு இந்த விஷயத்துல நாம ஒற்றுமையாய் இருந்தா தான் ஜெயிக்க முடியும் என அட்வைஸ் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து மறுபக்கம் ஜீவானந்தம் தர்ஷினியை பாதுகாப்பாக ஆறுதல் சொல்லி கூட்டி வருகிறார். போலீஸ் அவரை துரத்தி ரவுண்டு கட்டுகிறது.
அடுத்ததாக வீட்டில் குணசேகரன் நம் குடும்ப மானத்தை வாங்குவதற்காகவே போலீஸ் ஸ்டேஷன்ல அப்படி பேசினியா என்று கேட்க குடும்ப மானத்தை நான் வாங்கல என்று பதிலடி கொடுக்கிறார்.