ஈஸ்வரிக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஜீவானந்தம்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்று ஆதிரை அருணை சந்திக்க அருண் என்னுடைய வாழ்க்கையில் இனி உனக்கு இடம் இல்லை என சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் செய்து நான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி பேசுறேன் என்று சொல்ல இப்ப கூட நான் உங்ககிட்ட பேசுறது குணசேகரன் மனைவி என்பதற்காக இல்லை, ஈஸ்வரி என்பதால் என்று ஜீவானந்தம் ஷாக் கொடுக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த ஆதிரை கரிகாலனிடம் எனக்கு நீ வேண்டாம் என கோபப்பட கரிகாலன் கண்ணீருடன் இந்த வீட்டில எல்லாரும் என்னை கிறுக்கு பையனு நினைக்கிறாங்க, ஆனால் இந்த கிறுக்கு பையனுக்குள்ளவும் ஒரு மனசு இருக்கு ஆதிரை என்று கலங்க ஜான்சிராணி, விசாலாட்சி என எல்லோரும் எமோஷனலாகின்றனர்.

இதனால் ஆதிரை கரிகாலனை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதெல்லாம் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.