அஜித்திடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட குணம் இது மட்டும்தான் என எதிர்நீச்சல் குணசேகரன் பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அஜித்துடன் இணைந்து பணியாற்றிய பலரும் அவர்கள் அளித்த பேட்டியில் அஜித்தின் குணநலன்கள் பற்றி பேசி வருவது வழக்கம். அந்த வகையில் அஜித்துடன் ஆசை உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார்.

அஜித்திடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம் அவருடைய தாராள குணம் மட்டும் தான். அவர் ஆசை படத்தில் நடிக்கும் போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். இன்று 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் ஆனால் இரண்டு அஜித்திற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

அன்று முதல் இன்று வரை அதில் தான் சம்பாதித்த பணத்தை வருங்காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததில்லை. இப்போ வரைக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அனைவருக்கும் பலவிதமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அவ்வளவு ஏன் அஜித்தின் திருமணத்திற்கு பிறகு கூட அவருடைய இந்த குணத்தை ஷாலினியால் மாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார். மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.