
ஞானம் கேட்ட கேள்விக்கு ஷாக்கிங் பதில் அளித்துள்ளார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ஞானம் அதான் அப்பத்தான் அந்த 40% எழுதி கொடுத்துடுச்சுல என்ன பேச எனக்கு ஒன்னும் விளங்கலையேப்பா என விசாலாட்சி புலம்ப குணசேகரன் சும்மா அவர்களைப் பற்றி பேசி பெரிய ஆளாக்கி விடாதீங்க, அப்பத்தாவை என்ன பண்ணனும்னு எனக்கு நல்லா தெரியும் என ஷாக் கொடுக்கிறார்.

அடுத்து ஜனனி ஈஸ்வரியை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உங்க புருஷன் அவர நம்புன ஆதிரை, அம்மா, எஸ் கே ஆர் குடும்பம் என எல்லாரையும் ஏமாத்திட்டாரு என உண்மைகளை போட்டு உடைக்க உள்ளார்.

இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.