
குணசேகரன் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் அடுத்த நாள் என்ன நடக்கும் என யூகிக்க முடியாத வகையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஆதிரையின் கல்யாணத்துக்கு புடவை எடுக்க குணசேகரன் நந்தினி ரேணுகா மற்றும் ஜனனி என நால்வரும் ஒரு காரில் செல்கின்றனர்.

அப்போது குணசேகரன் ஏம்மா ஜனனி அந்த எஸ் கே ஆர் அவனது தம்பிகளும் எப்படி இவ்வளவு தூரம் இறங்கி வந்தாங்க என கேட்க நந்தினி, நீங்களும் தான் மாமா இறங்கி வந்திங்க என நெத்தியடி பதில் கொடுக்கிறார். உடனே ரேணுகா கொஞ்சம் அமைதியா இரு என சொல்ல ஜனனி அவங்க சரியாத்தானே கேக்குறாங்க என சொல்லி குணசேகரனை முறைக்கிறார்.

மறுபக்கம் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி என இருவரும் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்க அப்போது ஆதிரையும் அருணும் ஒரே காரில் வந்து இறங்குவதை பார்த்து என் ஆள் என்ன இவன் கூட வந்து இறங்குறா என கரிகாலன் கேட்க இவ்வளவு பண்ணதுக்கு அப்புறமும் அந்த ஆள நம்பிகிட்டு இருக்க என ஜான்சி ராணி கேள்வி எழுப்புகிறார்.