கண்ணு தெரியாத கபோதி ஆகிடுவ என கரிகாலனை கதற விட்டுள்ளார் விசாலாட்சி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஆதிரை நந்தினிக்கு வாழ்த்து சொல்ல கரிகாலன் அங்கு வந்து குறுகுறுவென பார்க்க விசாலாட்சி என்னடா பாக்குற என்று கேள்வி கேட்கிறார்.
உடனே கரிகாலன் பொம்பளைங்க சமைச்ச பிரசாதம் என்று சொன்னீர்களே என்று கேட்க அதெல்லாம் பார்த்தா கண்ணு தெரியாத கபோதி ஆகிடுவேன் அப்புறம் ஊருக்கு போகணும்னு நினைச்சு கண்ணு தெரியாம தான் போகணும் என்று சொல்ல ஹனிமூனுக்கு கண்ணு தான் முக்கியம் என்று கரிகாலன் அடக்கி வாசிக்கிறார்.
மறுபக்கம் தர்ஷன் உடன் ஈஸ்வரி ஜீவானந்தம் மற்றும் அவரது குழந்தை வெண்பாவை சந்தித்து ஹோட்டல் ஒன்றில் சாப்பிட அப்போது ஜீவானந்தம் வெண்பா கஷ்டப்படுறதுக்கு காரணம் நான் தான் என்று சொல்கிறார்.
உடனே வெண்பா நீங்க என்ன நல்லா தான் பாத்துக்குறிங்க ஆனால் நம்ம கூட அம்மா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.