குணசேகரனிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் நந்தினி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் நந்தினி சமைத்து பொருட்களை எல்லாம் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு கிளம்ப தயாராக குணசேகரன் கதிர் ஆகியோர் வீட்டிற்கு வந்து இறங்க எல்லோரும் கையும் களவுமாக சிக்குகின்றனர்.

குணசேகரன் சோறு எல்லாம் ஆக்கி எங்கே எடுத்துட்டு போறீங்க என்று கேள்வி கேட்க எங்கே இருக்குன்னு கேட்காதீங்க தெய்வ குத்தம் ஆயிடும் என்று சமாளிக்கின்றனர். கதிர் அப்போ வாங்க நாலு பேரும் சேர்ந்து போகலாம் என்று சொல்ல நாலு 40 பேர் எல்லாம் உங்க அண்ணனுக்கு ஒத்து வராது என்று சொல்லி விடுகின்றனர்.

பிறகு வீட்டுக்கு வந்ததும் குணசேகரன் எல்லாரும் எங்க போறாங்க கேட்டு சொல்லுங்கப்பா என்று சொல்ல ரேணுகா விசாலாட்சிக்கு கண் ஜாடை கொடுக்க அவரும் இவர்கள் மாட்டிக் கொள்ளாதது படி நடிக்கிறார்.