குணசேகரனை கடுப்பாக்கி உள்ளார் ஆடிட்டர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் மண்டபத்துக்கு வரும் ஆடிட்டர் இது என் வேலைக்கு இல்ல சார் என்று சொல்ல குணசேகரன் அப்புறம் கடுப்பாகிவிடுவேன் சார் என கோபப்படுகிறார். அந்த சமயம் பார்த்து அங்கு வரும் கதிர் கைரேகை எடுத்தாச்சா என்று கேட்கிறார்.

மறுபக்கம் ஜனனி சக்திக்கு போன் செய்து உடனே வா வீட்டுக்கு போகணும் என சொல்லி வீட்டுக்கு வருகின்றனர். அதற்குள் வீட்டில் ஜீவானந்தம் ஆட்கள் அப்பத்தாவின் கைரேகையை எடுத்து விடுகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பான ட்விஸ்ட்களோடு இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.