குணசேகரனுக்கு அடுத்த ஆப்பை உருவாக்கியுள்ளார் அரசு.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, மருத்துவமனையில் ஆதிரையை பார்க்கும் அரசு உனக்கும் அருணுக்கும் நல்லபடியாக இந்த கல்யாணம் நடக்கும் என சொல்கிறார். அடுத்து குணசேகரன் சொத்தில் அப்பத்தாவுக்கு எவ்வளவு ஷேர் என்ற விவரங்களை சேகரிக்க சொல்கிறார் அரசு.

மறுபக்கம் கதிர் நந்தினியிடம் ஹாஸ்பிடல்க்கு போனதற்காக சண்டை போட அவ உங்க தங்கச்சிங்க என சொல்ல கதிர் கோபப்படுகிறார்.