குணசேகரனுக்கு வக்காலத்து வாங்கிய வாசுகிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் விசாலாட்சி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு நாளுக்கு நாள் பரபரப்பாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் நீங்க எப்படி டௌரி வாங்க ஒத்துக்கிட்டீங்க என ஜனனி தோழி வாசுகி சாருபாலாவிடம் கேட்க நாங்க எதையும் கட்டாயப்படுத்தி கேட்கல அவங்க தங்கச்சிக்கு அவங்க எழுதி வைக்கிறாங்க என சொல்கிறார். ஆனா கடைசில அது எஸ்.கே.ஆரோட சொத்து தானே என வாசுகி மீண்டும் சொல்கிறார்.

இதனால் கோபப்படும் விசாலாட்சி வாய மூடுடி என அதிர்ச்சி கொடுக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் இதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.