
குணசேகரன் ஈஸ்வரியை அறைய நந்தினி கேட்ட கேள்வியால் வீடு ரணகளமாக மாறி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்றைய எபிசோடு வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த குணசேகரன் ஆரத்தி எடுக்க வேண்டாம் என தலைமுழுகி விட்டு அந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் நந்தினியை கூப்பிட்டு வச்சு வெளில போய் சோர்த்தியா வியாபாரம் பாக்குறியா அதுவும் குணசேகரன் வீட்டில் இருந்து என கேட்க அப்ப வெளிய போய் பார்க்கலாமா என நந்தினி கேட்க ஏய் என அதட்டுகிறார்.

அதை தொடர்ந்து ஈஸ்வரியை கூப்பிட்டு ஒரு ஆம்பளைய கைநீட்டி அடிப்பியா என கேட்க என்னுடைய சுயமரியாதையை காப்பாத்திக்க அடிச்சேன் என ஈஸ்வரி சொல்ல பளார் என ஒரு அறை விடுகிறார். அதனைத் தொடர்ந்து அப்பத்தா வீட்டு பெண்களிடம் அவன் எதையும் லேசுல விடமாட்டான். சொல்கிறார்.