மிஸ்ஸான ரேணுகாவால் குணசேகரன் ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தாவின் கை ரேகையை எடுக்க ஆடிட்டர் ரூமுக்குள் செல்ல வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து என்ன பண்றீங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்கள். நர்ஸ் குணசேகரன் பார்க்க சொன்னதாக ஆடிட்டர் உள்ளே வந்ததாக சொல்கிறார்.

அதன் பிறகு கல்யாண மண்டபத்தில் எல்லோரும் இருக்க ரேணுகா மட்டும் இல்லாததை கவனித்த குணசேகரன் ரேணுகா எங்கமா என்று கேட்க விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.

ரேணுகா எங்கே? ஜனனியின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.