
எஸ் கே ஆர் தம்பியின் பிடியில் சிக்கியுள்ளார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்றைய எபிசோடில் கதிர் போலீஸிடம் சிக்கிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, ஜனனி ஆதிரையின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் கேட்க அவர் ஆதிரையின் உடல்நிலை குறித்த தகவல்களை கூறுகிறார். மறுபக்கம் குணசேகரன் எஸ் கே ஆர் தம்பியிடம் எங்க உங்க அண்ணன் எங்க? உன் அண்ணி முந்தானை புடிச்சுகிட்டு போய்ட்டானா என நக்கலாக பேச ரவுடிகள் குணசேகரனை சுற்றி வளைக்கின்றனர்.

அந்த சமயம் சம்பவ இடத்திற்கு வரும் ஞானம் என்ன செய்ய போகிறார்? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இன்றைய எபிசோடின் ஹைலைட்டாக இருக்கப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது.