
குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சாருபாலா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜனனி, விசாலாட்சி, ஆதிரை ஆகியோர் அப்பத்தா இருக்கும் ரூமுக்கு வந்துள்ள நிலையில் விசாலாட்சி உங்க பேத்திக்கு அருணோட கல்யாணம் நடக்க போகுது, ஆசிர்வாதம் பண்ணுங்கனு கேட்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர் எஸ். கே.ஆர் கம்பெனிக்கு சென்றுள்ள நிலையில் கதிர் ஓவராக பேச சாருபாலா அமைதியாக இருக்க சொல்ல இல்லனா என்ன பண்ணுவீங்கனு கதிர் எகிற நாளைக்கு நடக்க போற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணிடுவ என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் படு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
