வேலராமமூர்த்தி படங்களில் பிஸியாக இருப்பதாக கூறிவரும் நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மேலும் இரண்டு நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் இயக்குனர் நடிகர் என பன்முக திறமைகளுடன் பலம் வந்து சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றவர் மாரிமுத்து.

நடித்தது வில்லன் ரோலாக இருந்தாலும் இதுவரை எந்த வில்லனுக்கும் கிடைக்காது மிகப்பெரிய வரவேற்பு மாரிமுத்து கிடைத்து புகழின் உச்சத்தில் இருந்து வந்தார். இப்படியான நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த மாரிமுத்துவை போலவே மேனரிசம் மற்றும் முக ஜாடை கொண்ட வேல ராமமூர்த்தி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களுக்கு சூட்டிங் சென்று வருகிறேன். எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க முடியுமா என தெரியவில்லை என்றெல்லாம் பில்டப் கொடுத்து வந்ததால் சன் டிவி மேலும் இரண்டு நடிகர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் புகுந்து விளையாடும் நடிகர் ராதாரவி மற்றும் பசுபதி ஆகியோரிடம் தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

மூன்று பேரில் ஒருவர் கன்ஃபார்ம் செய்யப்பட்டு விரைவில் அவரது காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.