சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Etharkum Thuninthavan Special Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெகு விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

சூர்யா ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா?? எதற்கும் துணிந்தவன் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவுள்ளது. இந்த பாடல் காட்சிகள் தொடர்ந்து காலதாமதமாகிறது ஏன் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk

அதாவது இந்த பாடலில் சூர்யா பிரியங்கா மட்டுமல்லாமல் பல நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ரிகர்சல் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பாடல் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல நட்சத்திர பிரபலங்களின் ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.