எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

Etharkum Thuninthavan New Releases Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதியில் மாற்றம்?? இந்த தேதியில் தான் படம் வெளியாகிறது - தீயாக பரவும் தகவல்

இதனையடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 11,229 தெருக்களில் கொரோனா : சுகாதாரத்துறை நடவடிக்கை

ஆனால் கொரோனாவால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட விதி முறைகள் நடைமுறையில் இருந்து வருவதன் காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சின்ன வயசுல இருந்தே Anirudh இப்படிதான் – அனிருத்தின் தந்தை பெருமிதம்! | HD

எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதியில் மாற்றம்?? இந்த தேதியில் தான் படம் வெளியாகிறது - தீயாக பரவும் தகவல்

பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பதிலாக இந்தப் படம் பிப்ரவரி 17 அல்லது 18ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.