Kommiyam

இறப்பு நிகழ்ந்த வீட்டில் சாணத்தால் மெழுகி கோமியம் தெளிப்பது இன்றளவும் பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

காரணம்:
▪ பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலிலிருந்து நேரம் செல்ல செல்ல நுண் கழிவுகள் வெளியேறுகிறது.

▪ அவற்றைத் தேடி ஏராளமான கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள் வருகின்றன.

▪ அந்தக் கிருமிகளினால் நமக்கு பல நோய்கள் வர அதிகமான வாய்ப்புள்ளது. பசுவின் சாணமும் கோமியமும் சிறந்த கிருமிநாசினி என்று அறியப்படுகிறது.

▪ அதனால் தான் அதனை இறந்தவர் வீட்டில் தெளித்து மெழுகுகின்றனர். அது மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களும் பசுவில் வெற்றி இருப்பதாக ஒரு ஐதீகம்.

▪ அதனால்தான் பசுவின் சிறுநீர் எனப்படும் கோமியம் புனித நதிக்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. அதனை இறந்தவர் வீட்டில் தெளிக்கும் போது தீட்டு நீங்கி பரிசுத்தம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here