
EPS Vs Vijay : மக்களுக்காக விஜய் என்ன செஞ்சிட்டாரு? இலவசம் வேணான்னு சொல்ற முருகதாஸுக்கு எதிரான ஆதாரங்கள் அத்தனையும் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனி சாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி சமீபத்தில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் சர்கார் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனி சாமி இலவசங்கள் வேணாம்னு சொல்ற முருகதாஸ் உறவினர்களே இலவச பொருட்களை வாஙகி பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறியுள்ளார்.
மேலும் விஜய் மக்களுக்கு என்ன செஞ்சிட்டாரு? கல்வி மருத்துவம் போன்ற இலவச திட்டங்களால் பல ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அவர்கள் ரூ 3.4 கோடி காரில் செல்வதில்லை. ஏசி ரூமில் படுத்து தூங்குவதில்லை என விஜயை நேரடியாக தாக்கியுள்ளார்.
மேலும் போராட்டங்களில் பேனர்களை கிழித்தது அதிமுகவினர் மட்டுமில்லை பொது மக்களும் தான் எனவும் கூறியுள்ளார்.
சர்கார் படத்திற்கு பிறகு இளைஞர்கள் பலரும் தங்களது வீட்டிலிருக்கும் இலவச பொருட்களை வெளியே தொக்கி போடும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.