இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ் - 70 கோடி மதிப்பில் முதல்வரின் புதிய திட்டங்கள்..!

EPS Visit to Ramanathapuram : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அரசால் தமிழகத்திற்கு என்ன செய்திட முடியும் என ஆரம்பத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அனைவரையும் அசர வைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறார்.

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தை அனைத்திலும் முன்னோடி மாநிலமாக உயர்த்தியுள்ளார். சீனாவில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் தமிழகமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை தாண்டி தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திற்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முழுமையாக நிறைவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும் வருகிறார்.

அந்த வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

New Schemes in Tamilnadu 21.09.20

மேலும் ரூபாய் 24.24 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல திட்டங்களை திறந்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 15,605 பயனாளர்களுக்கு ரூபாய் 72.61 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு செய்து 117 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதுவரை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நேரில் சென்று கொரானா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை குறித்த முறைகளை ஆய்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.