
Watch Full VIdeo : – திமுக தலைவர் ஸ்டாலினை மீண்டும் சவாலுக்கு அழைத்த முதல்வர் பழனிசாமி
EPS Speech in Sivaganga : வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முதல்வர் பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று மக்களிடம் அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்து வருகிறார். மேலும் திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களையும் எடுத்து கூறி வருகின்றார்.
இப்படியான நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது ஸ்டாலினை மீண்டும் விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
இங்கேயே ஒரு மேடை அமைப்போம், ஒரு விவாதத்திற்கு வருவோம், மக்கள் முன் விவாதிப்போம், நீங்கள் ஊழல் பற்றி குற்றம் சாட்டியிருக்கிறீர்கள், நீங்கள் ஒரு மைக்கை வைத்திருக்கிறீர்கள், நான் ஒன்றை வைத்திருப்பேன், உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன், நீங்கள் என் கேள்விகளுக்கு பதிலளியுங்கள், மக்கள் தான் நீதிபதிகள், அவர்களின் தீர்ப்பே இறுதியானது, எனவே நாம் அவர்களுக்கு முன் விவாதிப்போம் வாங்க என பேசியுள்ளார்.
முதல்வரின்இந்த கால கார பேச்சுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. முதல்வர் பழனிச்சாமி இதுவரை ஸ்டாலினே பல முறை விவாதத்திற்கு அழைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து இதனை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். இதுகுறித்து அவர் எந்தவித பதிலையும் தெரிவிப்பதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.