EPS slams Stalin
EPS slams Stalin

EPS slams Stalin – சேலம்: கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சேலம் கந்தம்பட்டியில்ரூ. 33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘சேலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.

பணிகள் 5 மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பாலம் திறக்கப்படும்’ என்று தெர்வித்தார்.

பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசுகையில், திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது.

‘கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி அரசை அவமதித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் ஸ்டாலின் அவர்கள் இவ்வாறு பேசி வருகிறார் ‘ என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசை தடுக்க திமுக முயற்சி செய்தது.

மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு (?) தடுக்க முயன்றது திமுக. இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலினை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.