EPS Requested
EPS Requested

EPS Requested – சென்னை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களது பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அதிமுக அரசு என்றும் புறக்கணித்தது இல்லை.

எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவும்.

ஆசிரியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தால், மாணவர்களின் கல்வி கேள்வி குறி ஆகிவிடும்.

மக்களின் நலனுக்காக மாநில அரசு செயல்பட வேண்டும், இதில் என்னோடு அரசு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு.

7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.14,500 கோடி செலவு. கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் ஊதிய உயர்வு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

கஜா புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு அரும்பணியாற்ற வேண்டும்.

நாம் ஒன்றுபட்டு உழைத்தால் தான், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். ஆகவே போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here