வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் | Edappadi Palaniswami

EPS Request to People : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வாழப்பாடியில் வேட்பாளர் சித்ராவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சருக்கு கூட்டணி கட்சியினர் கொடிகளுடன் பொது மக்களும் சாலையின் இரு பக்கங்களிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீதான ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து மீது ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். வாழப்பாடியில் மேடை அமைத்து கொள்ளலாம் என்று கூறிய முதலமைச்சர் விவாத அழைப்பிற்கு ஸ்டாலினிடம் இருந்து பதிலே இல்லை என்று விமர்சனம் செய்தார்.

EPS Challenge to Stalin

கருணாநிதி குடும்பம் வாரிசு அரசியல் குடும்பம் என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர், தனது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு யாரும் வரமாட்டார்கள் என்று கூறியதை மறந்து ஸ்டாலின் தற்போது உதயநிதிக்கு சீட் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டாலின் நிஜத்தில் முதலமைச்சராக வர முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று திமுகவில் சீட் வழங்கப்பட்ட நிலையில், முதல்வரின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.