EPS Request Reflection on Archeology Studies

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொல்லியல் துறை முதுகலை பட்டப்படிப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தொல்லியல் பட்டப்படிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

EPS Request Reflection on Archeology Studies : தொல்லியல் துறை வழங்க உள்ள 2 வருட முதுநிலை கல்வி பயில தகுதியான பட்டியலில் பாலி, சமஸ்கிருதம், உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தன.

இந்த தகுதிப் பட்டியலில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்ட இருப்பதே தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு பயில தமிழ் மொழியின் தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். மற்ற மொழிகளைக் காட்டிலும் அதற்கு முன்னதாகவே தமிழ் மொழி என அறிவிக்கப்பட்ட ஒன்று என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது முதல்வரின் கோரிக்கையை ஏற்று தொல்லியல் துறை முதுகலை பட்டப்படிப்பு பயில செம்மொழியான தமிழ் மொழியையும் தகுதிப் பட்டியலில் சேர்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனால் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு பயில தமிழ்மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களின் கோரிக்கை வைத்ததை அடுத்து இவ்வாறு தொல்லியல் துறை அறிவித்திருப்பது தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.