YouTube video

EPS Power in ADMK : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் மறைவை அடுத்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றார்.

ஆனால் அவரது பணியில் பெரிய அளவில் எந்த மாறுபாடும் இல்லை. தன்னுடைய குடும்பத்தை பலப்படுத்துவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து சசிகலா மூலமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றார்.

இவர் முதல்வராக பதவியேற்றதும் ஏ மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றத் தொடங்கினார் இதனால் மக்கள் மத்தியில் OPS-ஐ காட்டிலும் இபிஎஸ் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

OPS கட்சியில் யாருக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் முதல் கட்சித் தலைவர்கள் வரை, சீனியர்கள் என அனைவரிடமும் மதிப்புக் கொடுத்து நடந்து கொண்டார்.

யார் என்ன கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அதனை நிறைவேற்றி கொடுத்தார். ஒருநாள் பன்னீர்செல்வம் அவர்கள் யாருடைய கோரிக்கையையும் காதில் வாங்கவில்லை என கூறுகின்றனர்.

இதனால் ஆரம்பத்தில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்தவர்கள் கூட தற்போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி உள்ளனர்.

தமிழக மக்களுக்கு குடிமராமத்து திட்டம் என பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அடுத்த தேர்தலிலும் அவர் தான் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

மேலும் நாளை நடைபெற உள்ள அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 250 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த யார் 250 பேரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.