EPS Plan in Tamilnadu Election 2021

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி சாமர்த்திய தனத்துடன் செயல்பட்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

EPS Plan in Tamilnadu Election 2021 : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வியூகத்தால் ஏற்பட்ட தே.மு.தி.கவின் கூட்டணி வெளியேற்றம் அ.தி.மு.கவிற்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.

  • முதன் முதலில் பா.ம.கவுடன் இடங்களை உறுதி செய்து பின்னர் முதல் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது.
  • பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்து முதலில் கணக்கை தொடங்கிய அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்தியது.
  • பிடிவாத நிலை காரணமாக தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது.
  • தே.மு.தி.க தற்போது கூட்டணிக்காக சிறிய கட்சிகளுடன் கையேந்தும் நிலையில் நிற்பதாகவும், இது முதலமைச்சரின் தேர்தல் வியூகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இது 2011ஆம் ஆண்டு இல்லை என்று தே.மு.தி.கவிற்கு முதலமைச்சர் சாதுர்யமாக உணர்த்தியுள்ளார்.
  • ”வழியை விடு காற்று வரட்டும்” என்ற ரீதியில் அ.தி.மு.க தற்போது தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் குஷியாக பேசி வருகிறது.
  • தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளிடையே சீட்டு பேச்சுவர்த்தை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
  • இரண்டு பெரிய கட்சிகளும் அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளிடம் மல்லுக்கட்டி வருகிறது.
  • அதிருப்தியோடு தான் தி.மு.க கூட்டணியில் பிற கட்சிகளின் தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டது.
  • தேசிய கட்சியான காங்கிரஸ்க்கு மாநிலத் தலைவர் கண்ணீர்விட்ட பிறகு தான் வேறு வழியின்றி காங்கிரஸ்க்கு 25 சீட்டுகளை ஒதுக்கியது தி.மு.க.
  • நீண்ட இழுபறிக்கு பின்னரே சி.பி.ஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்தது தி.மு.க.
  • தலா 6 இடங்கள் என்ற அடிப்படையில் தி.மு.க பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வந்தது சி.பி.எம்யை கோபத்தில் ஆழ்த்தியது.
  • பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் வேறு வழியின்றி சி.பி.எம்வுடன் 6 இடங்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
  • தி.மு.க லெட்டர் பேட் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியது, கூட்டணி கட்சிகளை கோபமடையச் செய்தது.
  • ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விரக்தியில் தி.மு.க பெயர் தெரியாத கட்சிகளுக்கு கூட சீட் ஒதுக்கியுள்ளதாக கூட்டணி கட்சியினரே விமர்சனம் செய்து வருகின்றனர்.