ஆரவாரம் இல்லாமல் நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்! | TN Govt | Edappadi Palaniswami

EPS Nomination in Edappadi : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

AIADMK Election Statement 2021

இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவருடைய சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மீண்டும் தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.