EPS in Modern Problem Solve Scheme

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வீட்டிலிருந்தபடியே குறைகளை தெரிவிக்கும் ”1100” திட்டம், நாட்டிலே முதல் முறையாக அறிவிக்கப்பட்ட நவீன குறைதீர் யோசனைக்கு மக்கள் வரவேற்பு!

EPS in Modern Problem Solve Scheme : பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், இணையவழி மூலமும் தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக CM HELPLINE CITIZEN என்ற செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்கள் குறைகளை தீர்க்க, 50 ஆண்டுகள் பழமையான மனுக்களை பெட்டிக்குள் போடும் ஒரு பிரச்சாரத்தை செய்து வருகிறார், ஆனால் முதல்வரோ, அலைபேசி என முதல் Android ஆப் என நவீன முறையில் மக்கள் தங்கள் குறைகளை கூற, 1100 என்கிற எண் மற்றும் செயலியை கொண்டுவந்து, தனது தொலைநோக்கு சிந்தனையை வெளிபடுத்தி உள்ளார் முதல்வர் பழனிசாமி.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டி, பட்டா வேண்டியும், முதியோர் உதவி தொகை வேண்டி தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை இனி வீட்டில் இருந்தபடியே தெரிவிக்கலாம். இதன்படி பொதுமக்கள் தங்களது குறைகளை செல்போனில் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தும், இணையவழியாகாவும் அல்லது இதற்கான பிரத்யேக செயலியான CM HELPLINE CITIZEN வழியாகவும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது தான் முதல்வர் சிறப்பு குறைதீர் பிரிவு என்று சென்னை தலைமை செயலகத்தில் ஒரு அலுவலகம் துவங்கப்பட்டு, மக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுக்கும் வசதி செய்யப்பட்டது, இதற்காக தனியாக மூத்த IAS அதிகாரிகளை அமர்த்தி மக்கள் குறைகளுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டது, அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்” என்கிற திட்டத்தை அறிவித்தது, அனைத்து மாவட்டம் தோறும் அதிகாரிகளே நேரில் சென்று, முகாமிட்டு மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள் என்றும், பெறப்பட்ட குறைகள் 30 நாட்களில் பரிசீலினை செய்து குறைகள் பூர்த்திசெய்யபடும் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வர் அறிவித்த இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறப்பட்டு, மொத்தம் சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 55 லட்சத்து 25 ஆயிரம் குறைகளுக்கு தீர்வு காணபட்டுள்ளதக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதனால், முதல்வரின் இந்த 1100 என்கிற ஐடியா இன்றோ நேற்றோ திடீரென வந்தது இல்லை, பல காலமாக இதற்காக திட்டமிடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பின்பு அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம்.

எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் , புகார் பெட்டி என்கிற பிரச்சாரத்தை பற்றிய அறிவிப்பை மேற்கொள்ளுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

1100 குறை தீர்ப்பு எண்ணின் சிறப்பு அம்சங்கள்:

சென்னை சோழிங்கநல்லூரில் 12.78 கோடி ரூபாய் செலவில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்தபடியே 1100 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்.

இணையதளம், மின்னஞ்சல், CM HELPLINE CITIZEN செயலி வழியாக 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம். பொது மக்களின் புகார்கள் குறித்த துறைகளுக்கு அனுப்பபட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைகளை விரைந்து களைவதற்காக மனுதாரரிடம் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண் கேட்கப்படும். பொது மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அனைத்து துறை செயலாளர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.