பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - கூட்டத்தை விலக்கி வழிவிட்ட முதல்வர்! | EPS | ADMK

EPS Give Way to Ambulance in Political Meet : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரும் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு ஊராகச் சென்று பொதுமக்கள் மத்தியில் அதிமுக செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் என்ற பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் - கூட்டத்தை விலக்கி வழிவிட்ட முதல்வர்!

பிரச்சாரக் கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் சத்தம் ஒலித்தது. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு மக்களை ஒதுங்கி வழி விடுமாறு கூறி போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸுக்கு வழி விட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் கூட்டத்தைக் கடந்து சென்றதும் மீண்டும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கட்சி பணியை தாண்டி முதல்வர் பழனிசாமியின் இந்த மனிதாபிமான செயல் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.