EPS Condolences to Vasanthakumar
EPS Condolences to Vasanthakumar

ஏழை எளிய மக்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்கம் அரும்பாடுபட்டவர் என எம்பி வசந்தகுமார் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

EPS Condolences to Vasanthakumar : கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சந்த MP-யும்வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளருமன வசந்த் குமார் அவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய குமரி தொகுதி MP திரு.H.வசந்தகுமார் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு.

திரு.H.வசந்தகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் துறைமுகத்தில் வணிகப் கப்பல் போக்குவரத்து – தமிழக முதல்வர் அறிவிப்பு.!

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விற்பனையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி கடின உழைப்பால் உயர்ந்தவர். ஏழை எளிய மக்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர்.

நாங்குநேரி தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் குமரிமாவட்ட எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

வசந்தகுமார் அவர்கள் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.

அவரை இழந்து வாடும் கட்சி தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.