YouTube video

EPS Actions on Formers Loan : தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால் தமிழக மக்களையும் விவசாய பெருமக்களையும் மகிழ்ச்சியுள்ளாக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 14.63 லட்சம் விவசாயிகள் 12,110 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணெலி காட்சி வாயிலாக துவக்கியும் வைத்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.