enthiran vs avengers

enthiran vs avengers : உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை இந்தியாவில் விளம்பரப்படுத்துவதற்காக இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான Joe Russo இந்தியா வந்துள்ளார்.

இதன் நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்திரன் படத்தைப் பார்த்துதான் அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்ததாக கூறியுள்ளார்.

எந்திரன் கிளைமாக்ஸில் ரோபோக்கள் ஒவ்வொன்றாக இணைந்து ஒரு மெகா சைஸ் ரோபோவாக மாறுவதுபோல் அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்திலும் ஒரு காட்சியை வடிவமைத்ததாகவும் ஆனால் நீளம் கருதி பின்னாளில் அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து இந்த ரகசியத்தை அவரே உடைத்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெருமைக்குரிய தருணமாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here