ENPT Release Date
ENPT Release Date

ENPT Release Date – தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் யூ டியூபில் இருந்து திடீரென நீக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது தனியார் ஆடியோ நிறுவனத்துக்கு இப்படத்தின் ஆடியோ உரிமத்தை விற்க தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும் அதனால் ஒன்றாகா நிறுவனத்தின், யூடியூப் சேனலிலிருந்த, இப்படத்தின் வீடியோக்களை பிரைவேட் மோடில் மாற்றியுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த உரிமத்தை வாங்கிய நிறுவனம் சோனி என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் தற்போது பல படங்களை வெளியிட்டு வரும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தை வாங்கி வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மே மாதம் இப்படம் வெளியாகும் என பரவலாக கூறப்படுகிறது.