ENPT Box Office Report
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் முதல் நாளே சென்னையில் பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக கிடப்பில் இருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படு பயங்கரமாக இருந்து வந்தது.

தனுஷ் ரசிகர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 4 வருடங்களாக இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக நேற்று இப்படம் ரிலீசாகி விட்டது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் வேலை நாட்களையும் பொருட்படுத்தாமல் கூட்டம் அலை மோதியது.

இதனால் இப்படம் முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ 74 லட்சம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.