ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் ஜெய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் எண்ணித்துணிக. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, ஜி மாரி முத்து உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாறுபட்ட கதைக்களத்துடன் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிக்க கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஸ்ரீதரன் மரியதாஸன் அவர்கள் வழங்க MSM Movie Traders இந்த படத்தை வெளியிடுகின்றனர். JB தினேஷ் ஒளிப்பதிவு செய்ய VJ சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெய் உட்பட படக்குழுவினர் பலரும் ரிலீஸ் போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஜெய்யின் எண்ணித்துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.