ஜெய்யின் எண்ணித்துணிக படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய், அதுல்யா ரவி, சாம் சுரேஷ், வம்சி கிருஷ்ணா என பல நடிப்பில் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக.

ஜெய்யின் எண்ணித்துணிக வெற்றியை சுவைத்ததா? முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

படத்தில் வில்லன் சாம் சுரேஷ்க்கு 2000 கோடி ரூபாய் வைரத்தை கொள்ளையடித்துக் கொடுக்க வேண்டிய வேலை வம்சி கிருஷ்ணாவுக்கு உள்ளது. இதனால் வம்சி கிருஷ்ணா நான்கு பேர் உதவியுடன் கொள்ளையடிக்கிறார். ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் தங்க நகைகளை பங்கு போட்டுக் கொள்ளுங்கள் ஆனால் 2000 கோடி மதிப்புள்ள வைரம் எனக்கு என டீல் பேசுகிறார். அரசியல்வாதி சுனில் செட்டிக்கும் தொடர்புள்ள இந்த கடத்தலை ஜெய் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து ஜெய் எப்படி முறியடிக்கிறார்? எதற்காக இந்த கடத்தல் என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் ஜெய் இதுவரை இல்லாத அளவிற்கு செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எண்ணி துணியை படத்தினால் ஜெய்க்கு இனி பல வாய்ப்புகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

வம்சி கிருஷ்ணா, சாம் சுரேஷ் என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். அதுல்யாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் வெற்றிச்செல்வன் சிறந்த கதையை தேர்வு செய்து திறம்பட இயக்கி உள்ளார். நிச்சயம் திரையுலகில் அவருக்கு பெரிய இடம் இருக்கும் என நம்பலாம்.

ஜெய்யின் எண்ணித்துணிக வெற்றியை சுவைத்ததா? முழு விமர்சனம்

இந்த படத்தில் தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க சாம் சி எஸ் இசை பலம் சேர்த்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

  • 1. படத்தின் கதைக்களம்
  • 2. இசை
  • 3. இயக்கம்
  • 4. ஜெய் நடிப்பு
  • தம்ப்ஸ் டவுன் :
  • 1. முகமூடி அணிந்து வரும் மனிதர்கள் தேவைதானா என யோசிக்க வைக்கிறது.