Ennai Prasatham : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Ennai Prasatham :

# 108 திவ்ய தேசங்களில் 79 வது திவ்யதேசமான திருவரமங்கை என்னும் வானமாமலை திருத்தலத்தில் குடிகொண்டு அருளும் இறைவனுக்கு அருள்மிகு தோதாத்ரிநாதன் என்பது திருநாமம் ஆகும்.

# அவர் நோய் தீர்க்கும் நாதனாக விளங்குகிறார். இத்தலத்தில் நோய்களை தீர்க்கும் எண்ணெய்க் கிணறு ஒன்று உள்ளது. அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்யை சிறிது உண்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.

வாழைப்பழத்தை ஏன் தெய்வங்களுக்கு படைக்கிறார்கள்? இதற்குள் இவ்வளவு காரணம் இருக்கு – தெரிந்து கொள்ளுங்கள்.!

# எண்ணெய் கிணறு:

திருவரமங்கை திருத்தலத்தில் 25 அடி நீளமும், 15 அடி அகலமும் உள்ள ஒரு எண்ணெய் கிணறு உள்ளது.

ஒவ்வொரு நாளும் இத்தல இறைவனுக்கு ஆறு படி நல்லெண்ணெய்யும், சந்தன எண்ணெயும் கலந்து காப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

# பிறகு திருமஞ்சனம் செய்யப்பட்ட எண்ணெய்யை அக்கிணற்றில் ஊற்றப்படுகிறது. இக்கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுப்பதில்லை. மழைநீர் கொட்டினாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. எண்ணெயின் தன்மையும் மாறுவதில்லை.

# எண்ணெயின் குணங்கள்:

இந்த எண்ணெய்யை சிறிது உட்கொண்டால், தீராத சரும நோய், மூலம் மூட்டுவலி போன்ற நோய்களும் தீர்ந்து விடுகின்றது. இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்துக் கொண்டால் தீராத நோயும் குணமாகிவிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here