கடைசி நேரத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Enna Solla Pogirarai Release Postponed : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனையடுத்து அஸ்வின் நடிப்பில் டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிவாங்கி பாடல் ஒன்றை பாடி இருந்தார்.

இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் : பிரதமர் மோடி

இந்த படத்தை டிசம்பர் மாத இறுதி வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்தியது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அஸ்வின் நான் கதை கேட்கும்போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் நான் முழுமையாக கேட்ட ஒரே ஒரு கதை என்ன சொல்லப் போகிறாய் தான் என பேசினார்.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa

மேலும் மேடையில் இவர் செய்த செய்கைகளும் பேச்சும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஒரு படம் கூட ரிலீசாகவில்லை அதற்குள்ள இவ்வளவு ஆட்டமா இடம் தெரியாமல் போய் விடுவாய் என பலர் அஸ்வினின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் அவர் ஆர்வக்கோளாறில் செய்துவிட்டதாக மன்னிப்பு கேட்டார்.

இப்படியான நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி போய் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வினின் பேச்சும் ஒரு காரணமென நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.