முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஸ்வின் திரைப்படம் படுமோசமான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enna Solla Pogirai TRP Rating : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகராகவும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தவர் அஸ்வின். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

அஸ்வின் மீது குறையாத கோபம்.. டிஆர்பியில் என்ன சொல்ல போகிறாய் படத்திற்கு கிடைத்த படுமோசமான ரேட்டிங்.!!

அதன் பின்னர் புகழுடன் சேர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் இணைந்து ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஸ்வின் பேசிய பேச்சு தலை கனத்துடன் இருப்பதாகக் கூறி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இந்த படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் முறையாக என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. அஸ்வின் பேச்சு பேச்சா அவர் மீது இன்னும் கோபம் குறையாமல் இருக்கும் மக்கள் இந்த படத்தை நிராகரித்துள்ளனர்.

அஸ்வின் மீது குறையாத கோபம்.. டிஆர்பியில் என்ன சொல்ல போகிறாய் படத்திற்கு கிடைத்த படுமோசமான ரேட்டிங்.!!

இதனால் இந்த படத்திற்கு வெறும் 0.99 ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளது.