அஸ்வின் நடிப்பில் வெளியாகவுள்ள என்ன சொல்லப் போகிறாய் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Enna Solla Pogirai Movie Review : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.

படத்தின் கதைக்களம் :

RJ ஆக பணியாற்றும் அஸ்வினுக்கு தனக்கு மனைவியாக வருபவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளது. இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். அவந்திகா எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தனது கணவருக்கு ஒரு காதல் கதை இருக்க வேண்டும் என ஆசை இருக்கிறது.

இதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜ் அஸ்வினி தான் என கூறி விடுகிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கு தேஜ் அஸ்வினி மீதே காதல் வந்து விட அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் ‌:

நாயகனாக நடித்துள்ள அஸ்வின் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் சில தடுமாற்றங்கள் உள்ளது.

நாயகிகளாக நடித்துள்ள தேஜஸ்வினி, அவந்திகா மிஸ்ரா நடிப்பு ஓகே.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின், புகழ் காம்போ இந்த படத்தில் பெரிய அளவில் ஒர்கவுட் ஆகவில்லை.

முதல் பாதி சூப்பராக இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிகர்களை சோதிக்கிறது. கதையிலும் பெரிய அளவில் அழுத்தம் இல்லை.

REVIEW OVERVIEW
என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
enna-solla-pogirai-movie-review-in-tamilமொத்தத்தில் என்ன சொல்ல போகிறாய் படம் என்னத்த சொல்றது என சொல்ல வைத்து விட்டது.