யூ டியூப்பில் என்ஜாயி என்ஜாமி பாடல் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது.

Enjoyi Enjaami Song Record : தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் பாடகி மற்றும் திருக்குறள் அறிவு ஆகியோரின் குடலில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆல்பம் பாடல் என்ஜாயி என்ஜாமி.

யூ ட்யூப்பில் என்ஜாயி என்ஜாமி பாடல் படைத்த சாதனை - 3 மாசத்துல இப்படியொரு ரெக்கார்ட்டா??

விவசாயத்தையும் கிராமத்தையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடல் வெளியான சில மணி நேரங்களில் பல கோடி பார்வையாளர்களை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் வெளியாகி மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.