engineering
சென்னை தலைமை செயலகத்தில் 14 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதாவது 10 பெருக்குபவர்கள் மற்றும் 4 துப்புரவு பணியாளர்கள் என 14 காலியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Engineering students apply for cleaning work – இதற்கு கல்வி தகுதி எதுவுமில்லை. உடல் வலிமையோடு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சுபஸ்ரீ விவகாரம் – பேனர் வைத்த கவுன்சிலர் ஜெயகோபால் கைது

இதனையடுத்து, இந்த பணிகளுக்கு பி.இ., பி.டெக். எம்.டெக். எம்.இ படித்தவர்கள் என 4 ஆயிரத்து 607 மெத்த படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதில், 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு கடந்த 23ம் நேர்காணல் தொடங்கியது. அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடந்து வருகிறது.

தமிகத்தில் ஒவ்வொரு வருடம் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயாராக இருக்கும் மனநிலைக்கு அவர்கள் வந்து விடுகின்றனர். வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுவதற்கு இது ஒன்றே சாட்சி என பட்டதாரிகள் குமுறுகிறார்கள்.