Engada Iruntheenga Ivvalavu Naala Trailer
Actress Ishaara Nair in Engada Iruntheenga Ivvallavu Naala Movie Stills

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Engada Iruntheenga Ivvalavu Naala Trailer : தமிழ் சினிமாவில் யோகி பாபு, அகில், இஷாரா நாயர், ரெஹானா, கௌசல்யா, ஷகிலா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா.

திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது. துரை சுதாகரின் TN75 KK Creations நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. சுரேஷ் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள சுப்புராயன் ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளார். வர்ஷன் மற்றும் ஜெய்டன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். நாராயணன் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை வெளியிட உள்ளது.

முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளுக்கு வரும் மக்களை நிச்சயம் சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.